வீடு



இரண்டாயிரம் சதுர அடி
இரண்டடுக்கு மாடி
கொஞ்சி விளையாட தோட்டம்
நெஞ்சம் உருகிட பூசையறை
படிப்பதற்கு ஓரறை
அணைப்பதற்கு ஓரறை
பாரதிபோல் காணிநில வீடொன்று கனவு காணுகிறேன்...
ஆறுக்கு நாலென்ற கணக்கில் அடக்கமான வீடு
கல்லறைத்தோட்டத்தில் காத்திருப்பது தெரியாமல்..