பிரியும் அந்திவேளையில்
அழுது சிவந்திருக்கும்
வானும் சூரியனும்...- எனினும்
மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையில்
மறைந்துபோகும்..
என்றோ ஒருநாள்
நானும் உனை சந்திப்பேன் மீண்டும்...
அதுவரையிலும்,
மழைக்காய் ஏங்கும்
காகிதக் கப்பல்போல்
காத்துக்கொண்டிருப்பேன்...
1 comment:
அதுவரையிலும்,
மழைக்காய் ஏங்கும்
காகிதக் கப்பல்போல்
காத்துக்கொண்டிருப்பேன்...//
நிஜம்தான்! மழையில்லாமல் காகிதக் கப்பலின் நினைவு எங்கே வருகிறது??
அன்புடன் அருணா
Post a Comment